பிருத்விரருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம் 'லூசிப்பர் 2 எம்புரான்' இதில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கலவரம் தொடர்பான காட்சிகள் குஜராத்தில் 2002-ல் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதையடுத்து மோகன்லால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி, சர்ச்சையான 17 காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.
எம்பூரான் திரைப்படத்ததிற்க்கு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது அணையை இடிக்கும் காட்சி வைத்த பிருதிவிராஜை மோகன்லாலை தயாரிப்பாளர் கோபாலனை கண்டித்து மதுரையில் மோகன்லால் புகைப்படங்களில் காலனியால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் விவசாய சங்கங்கள்.
0 கருத்துகள்