நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார்.
இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார் என்கிறார் .
பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.
"மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்" என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை .
0 கருத்துகள்