அ.தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2011-2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஒரு வருடத்துக்கும் மேலாக செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். அவர் ஜாமீன் கோரி பலமுறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் செப்டம்பர் மாதம் 25-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்த அவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் ஆனாலும் அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் இந்த வழக்கு வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமவலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு ஆதரவாளர்கள் விடுகளில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள் கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கிற சுப்பிரமணி என்பவரின் வீடு கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் வீடு செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ். சங்கரின் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் 5 கார்களில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள் அவர்கள் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பதிவு எண்களை கொண்ட கார்களில் வந்துள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்னனர். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி அது செய்யது வீடு பேறது அவரது மற்றும் ஆதரவாளர்களான கரூர் கொங்கு மெஸ் மணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர், சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது மேலும் அப்போது அந்த வீடுகள் மற்றும் சில அலுவவாங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் இதேபோல் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்