Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது மாயாவதி கூறியுள்ளார்.

 


பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார்.

ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது என்றும் மாயாவதி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான உயர்நிலை ஆலோசனைக்கூட்டம் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையில் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி அறிவித்தார்.

அதே நேரத்தில் தனது சகோதரரும், ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமார் மற்றும் ராம்ஜிகௌதம்ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயாவதி அறிவித்தார்.நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு யாரும் எனக்குக் கிடையாது என்று கூறிய மாயாவதி, உறவினர்களைவிட கட்சியின் நலன் தான் எனக்கு முதன்மையானது என்றும் அறிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியில்ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனார் அசோக் சித்தார்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசோக் சித்தார்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்