இந்தியாவில் ரூ.100-க்கு ஜியோ ப்ரீபெய்ட் சிம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 'ஜியோ ஹாட்ஸ்டார்' சந்தாவை பெறுகின்ற வகையில் ரீசார்ஜ் பிளானை ஜியோ டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள். இப்போதும் மற்ற தனியார் நிறுவனங்களை ஒப்பிடும் போது ஜியோவின் ரீசார்ஜ் கட்டணம் சற்று மலிவாக உள்ளது. இந்த நிலையில், ரூ.100-க்கு புதிய திட்டம் ஒன்றைஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தலாம். கூடுதலாக 5ஜிபி டேட்டா இதில் வழங்கப்படுகிறது. மற்றபடி வாய்ஸ், எஸ்எம்எஸ் போன்றவை இதில் இல்லை. இது டேட்டா ஒன்லி பிளான். இதில் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை பயனர்கள் பார்க்கலாம் கடந்த மாதம் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஜியோ சினிமாவை ரிலையன்ஸ் ஜியோ இணைத்தது, ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கி வருகிறது. வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசன் மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதை கருத்தில் கொண்டு இந்த பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.
0 கருத்துகள்