Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

திருமாவளவன் ஆவேச பேச்சு கோட்டையில் கொடி ஏற்றுவோம்.

 


விடுதலை சிறுத்தைகளின் கொடி கோட்டையில் பறப்பது முடியாதகாரியம் இல்லை என்றும்

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் காலம் வந்து விட்டது என்றும் திண்டிவனம் அருகே நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் .திருமாவளவன் எம்.பி.கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்எடையாளம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகள்,அவமானங்கள், அவதூறுகள் ஆகியவற்றை எல்லாம் கடந்து 25 ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தோம். அதற்கான பலன் தான் நமக்கு வேறுயாருக்கும் கிடைக்காத சின்னமான பானை சின்னம் கிடைத்துள்ளது.

இப்படி ஒரு நிரந்தரமான சின்னம் நமக்கு கிடைத்திருப்பதன் மூலம் அந்த சின்னம் உணர்த்தும் அறிவியல் என்னவென்றால் உங்களாலும் ஆட்சி அதிகாரத்தைகைப் பற்ற முடியும், அதற்கான காலம் வந்துவிட்டது என்பது தான். ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமக்கு நெருக்கடிகள் குறைந்து விட்டதா என்றால் இல்லை நெருக்கடிகளை தாண்டித் தான் நாம் அரசியல் களத்தில் பயணிக்கவேண்டி இருக்கிறது. எப்படியாவது இந்த கூட்டணி யில் இருந்து வி.சி.க.வை வெளியேற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் நோக்கம் நம்மை வலிமைப்படுத்துவது அல்ல. தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்திவிட்டால்  நம்மை போன்றவர்கள் அரசியல் களத்தில்  தனிமைப்படுத்தப்பட்டு சிதறும் நிலை ஏற்படும். பா.ம.க.வை போல் நம்மால் அரசியல் செய்ய முடியாது. நாம் அப்படி அரசியல் செய்தால் நம்மை இந்த தமிழ்நாடு கடுமையாக புறக்கணிக்கும் தி.மு.க.வில் கூட்டணியில் இருந்தால் கூட தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும். ஆதிதிராவிடர் மக்களுக்கும் எதிராகவே இயங்கக்கூடிய அதிகாரிகளின் போக்கு வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் பார்வைக்கு நாம் எடுத்துச்செல்ல உள்ளோம். கோட்டையில் நம் கொடி பறக்கிற வரை இது போன்ற அடக்குமுறைகளை நாம் கையாண்டு தான் ஆக வேண்டும். இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளின் கொடி கோட்டையில் பறப்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை.

இவ்வாறு திருமாவளவன் அவர்கள் பேசியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்