Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஒவ்வொரு 1 மணி நேரமும் 60 குழந்தைகளை நாய்கள் கடிப்பதாக மத்திய அரசு தகவல்.


இந்தியா முழுவதும் கடந்தாண்டு சுமார் 22 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும் சராசரியாக ஒவ்வொரு 1 மணி நேரமும் 60 குழந்தைகளை நாய்கள் கடிப்பதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கடி பாதிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது கடந்தாண்டில் 21,95,122 பேரை நாய்கள் கடித்துள்ளன இவர்களில்

37 பேர் இறந்தனர் குரங்கு உட்பட இதர விலங்குகள் 5,04,728 பேரை கடித்துள்ளன என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தாதள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்