Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

CPIMன் புதிய மாநிலத் தலைவர் யார் இந்த பெ.சண்முகம்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய்யலாளராக பெ.சண்முகம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

விவசாய்கள் பழங்குடியினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவராக அறியப்படும்.அவரைப் பற்றி பின்வருமாறு திருச்சி மாவட்டம் லால்குடி அருணகே உள்ள பெருவன்நல்லூரில் 1960 ஆம் ஆண்டு பிறந்த பெ.சண்முகம் தனது கல்லூரி காலத்தில் இருந்து புரட்சிகர  செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்கத்தில் இணைந்தார் அப்போ இருந்தே மாணவர் தலைவராக தீவிர அரசியலில் இயங்கியவர் பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் முழு நேர உளியராக செயல்பட்டார் 1992 ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக  தேர்வான பெ.சண்முகம் தமிழக வரலற்றில் கரும்புள்ளியாக இருக்கும் வாச்சார்த்தி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தை 30 ஆண்டுகள் வழி நடத்தி வென்றுக்காட்டிய தலைவர்களில் முக்கியமானவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக  13 ஆண்டுகள் மாநில தலைவராக ஏறக்குறைய 4 ஆண்டுகள் என பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் கலமாடிய போராட்டங்கள் ஏறாளம் குறிப்பாக பழங்குடி மக்களின் சாதிச்சான்று வழங்க கூறி போராட்டங்களிலும் அனைத்து விதமான நில உரிமை போராட்டங்களிலும் இவர் முன்னனியில் நின்றவர் பழங்குடியின் நில உரிமை போராட்டத்தை முன்னெடுத்து கடந்த 2006 ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை இவர் சந்தித்த பின்னரே

வரலாற்று சிறப்புமிக்க வனஉரிமை சட்டம் சாத்தியமானதாக சொல்லப்படுகிறது

2021 ல் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்கச் செய்த வரலாற்று சிறப்புமிக்க

தில்லி விவசாய்கள் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரம் விவசாய்களை தலைமை ஏற்று பெ.சண்முகம் வழி நடத்தியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது விழுப்புரத்தில் நடைப்பெற்ற 24 ஆவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  மாநில மாநாட்டில் அக்கட்சிக்கு மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகிவுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்