மவுளி அமாவாசை தினத்தையொட்டி மகா கும்பமேளாவில் புனித நீராட ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அதிகாலையில் பயங்கர நெரில் ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகினர் 60 பேர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அரைகுறையாக செய்யப்பட்ட ஏற்பாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 13ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 43 நாட்கள் நடந்து வருகிறது. கங்கை யமுனை. சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமத்தில் சாதுக்கள், துறவிகள் பக்தர்கள் என தினமும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர். இதுதவிர. 12 கீ.மீ தூரம் கங்கை கரையின் பல இடங்களில் பக்தர்கள் நீராட தனித்தனி நீராடல் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருந்தும் மக்கள் எண்ணிக்கை கோடிகளை தாண்டியுள்ளது இதானல் நேற்று பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர். இதில் பலியானோரின் உடல்கள் போர்வைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது. பிணக்குவியலுக்கு நடுவே பரிதவித்தபடி உட்கார்ந்துள்ள ஒருவர் தன் உறவினர்களின் சடலங்களை மீட்டு எடுத்துச் செல்லும்படி போலீசாரிடம் கைகூப்பி கெஞ்சியுள்ளர்.
0 கருத்துகள்