டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,500
உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் "9பியாரி திதி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த 6ம் தேதி காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இதேபோல் "ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என கடந்த 8ம் தேதி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின்பைலட் "யுவ உதான் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள படித்த, வேலையில்லா இளைஞர்களுக்கு ஆண்டுத்தோறும் ரூ.8,500 உதவித்தொகை வழங்கப்படும்.
இது இலவசம் அல்ல நிறுவனங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் நிதி உதவி அளிக்கும். அவர்கள் இந்த நிறுவனங்கள் மூலம் பணம் ஈட்டுவார்கள். அதனால் இந்த திட்டம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பணம் சம்பாதிக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்