Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இந்த அதிபருக்கு ரூபாய் 65,000 கோடி சொத்து மதிப்பா.?


அமெரிக்காவின் ஜனவரி 20ம் தேதி 47 வது புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு பின்வருமாறு  கோல்ஃப் மைதானங்கள், ரியல் எஸ்டேட், சொகுசு கார்கள், விமானங்கள் ஆகிய மொத்த சொத்து மதிப்பு (சுமார் ரூ. 65ஆயிரம் கோடி) என கூறப்படுகிறது சொத்துகளை பொறுத்தவரையில், அவரிடம் 19 கோல்ஃப் மைதானங்கள், ரியல் எஸ்டேட்கள் என 2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை அறிவித்தபோது, அவரது சொத்து மதிப்பு சுமார் 4.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டது. அண்மைகால புள்ளிவிவரங்களின்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ், அவரது சொத்து மதிப்பு (தோராயமாக 64,855 கோடி) என மதிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் உலகெங்கிலும் மொத்தம் 19 கோல்ஃப் மைதானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். அவை அவருடைய மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த மைதானங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ளன.

டிரம்பின் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் அவரது வணிகத்தின் அடித்தளமாக உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐந்தாவது அவென்யூவில் அமைந்துள்ள கட்டிடம் டிரம்ப் நிறுவனத்தின் தலைமையகம் ஆகும். இதில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக இடம் மற்றும் ஒரு ஆடம்பர ஷாப்பிங் மால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதுதவிர நியூயார்க், சிகாகோ மற்றும் லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களில் டிரம்பிற்கு சொந்தமாக பெரிய வணிக கட்டிடங்கள் உள்ளது. அவரிடம் போயிங் 757 உட்பட தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் மற்றும் தொழில்கள் மூலமாக, டிரம்பின் சொத்து மதிப்பு 7முதல் 8 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்