தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சங்கம் அமரன் படத்திற்கு இவ்வாறு தனது கண்டணத்தை தெரிவித்துள்ளது.
திரு.கமலஹாசன் அவர்களின் Rajkamal Films International மற்றும் Sony Pictures Films India தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 27.10.2024 அன்று வெளியான அமரன் திரைப்படத்தின் ஒரு காட்சியை பார்த்து, CAPF வீரர்களான நாங்கள் வேதனை, அதிர்ச்சி, ஆவேசம் ஆகியவற்றால் மூழ்கியுள்ளோம்.
பாராளுமன்ற தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் ஒரு தாக்குதல் காட்சியில், எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிக்க இழிவானதாகவும், அவமானகரமாகவும் இருக்கிறது. இது, எம் CRPF வீரர்களின் தியாகத்தை, வீரத்தைக் கடும் அளவில்
அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை
மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது.
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், கற்பனையைக்
கொண்டு எம்மீது இழிவுகூறும் ஒரு காட்சியை உருவாக்கி,
மண்ணின் மைந்தர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தி நாட்டை
காக்கும் போது, அதை கேலியாகப் படம் பிடிப்பது நியாயமா?
நம் 44 RR வீரர்கள் சண்டையிட்டு வீரமரணம் அடைவதை
வைத்துக் காட்டி, அதே நேரத்தில், CRPF வீரர்கள் எந்த
எதிர்ப்புமின்றி கொல்லப்படுவதாக
தியாகத்தை
முற்றிலும்
காட்டுவது, அவர்கள் கௌரவிக்காமல் கொச்சைப்படுத்துவதை மட்டுமே உணர்த்துகிறது. உண்மையில் இது எங்களின் இதயத்தைக் கிழித்தெரிக்கின்றது.
நாட்டின் பல்வேறு மூலைகளில் எந்த பாதுகாப்பும் சலுகையும் இன்றி உறுமிக்கும் மாயவிழிகளுக்கு எதிராக போராடி உயிரை தியாகம் செய்த எண்ணற்ற CRPF வீரர்களின் புகழ்மிக்க வரலாற்றை இந்த ஓர் காட்சி மட்டுமே முற்றிலும் அழிக்கக் கூடியதாகவே இருக்கின்றது என்ற எண்ணம் எங்களை வேதனைக்கு ஆளாக்குகிறது.
இந்தப் படத்தில் இச்செயலில் பொதுமக்கள் மனதில் எம் CRPF வீரர்கள் மீதான மதிப்பை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதால், TN CAPF WARA அமைப்பு தனது கடும் கண்டனத்தை அமரன் படக்குழுவிற்கு தெரிவித்துக்கொள்கின்றது. எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
0 கருத்துகள்