Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மதுரையின் இயற்கையை அழிக்க வரும் டங்ஸ்டன் சுரங்கம்..



மதுரை மாவட்டத்தை அழிக்க, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில்டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்து, மக்களை அகதிகளாக்கி அழிக்க   ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ("Hindustan Zinc Limited") என்ற பெயரில்,  ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சக ஏலத்தில் கடந்த நவம்பர் 07 அன்று ஏலம்  எடுத்து உள்ளது வேதாந்தா...

இதனால், கிரானைட் குவாரிகளால் எண்ணற்ற பாதிப்புகளை எதிர்கொண்ட மதுரை மாவட்டம்,  மீண்டும் வேதாந்தா என்ற பன்னாட்டு கம்பெனியால்  மிகப்பெரிய அழிவை சந்திக்க உள்ளது.

 எண்ணற்ற ஊர் மக்களை ஊரை விட்டு வெளியேற்றி அகதிகளாக்கும், தொல்லியல் சின்னங்களை பாதிக்கும், அரிட்டாப்பட்டி பல்லுயிர் சூழல் மண்டலத்தை அழிக்கும், விவசாயம் மற்றும் இயற்கையை எண்ணற்ற வகையில் பாதிக்கும் வகையில் உள்ள,

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம், மதுரை மாவட்டத்தில் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்