Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

விஜய் கூறுவது கொள்கையல்ல கூமுட்டை சீமான் விஜய் மோதல் ஆரம்பம்..

 


தமிழக வெற்றிக் கழகம் கொள்கை மாநாடு அக்டோபர் 27 விழுப்புரம் விக்ரவாண்டியில் நடைபெற்றது  அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடான கொள்கை திருவிழாவில்  தனது கட்சிக்கான கொள்கையை அறிவித்தார். கொள்கைய ஆசான்ங்களையும் அறிவித்தார். அதன் பின்பு  அனைத்து கட்சி தலைவர்களிடம் இருந்து விமர்சனம் எழுந்தன.

இந்த நிலையில் நவம்பர் 1 சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தவெக தலைவர் விஜய் அவர்களை இவ்வாறு மேடையில் விமர்சித்து உள்ளார்.

தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா..?அடிப்படையே தவறு விஜய் கூறுவது கொள்கையல்ல கூமுட்டை

சாலையின் அந்த ஓரம் நில் அல்லது இந்த ஓரம் நில் நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவார்.

இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை.

லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான்: இதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது

தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல.

வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும்.

நாங்கள் அதைப் படித்து பிஎச்டி வாங்கிவிட்டோம்

நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும்

சினிமால பஞ்சு டயலாக் இல்ல தம்பி. நெஞ்சு டயலாக்.

ஒன்று சாம்பார் என்று சொல்லு, இல்ல கருவாடு என்று சொல்லு அதென்ன கருவாட்டு சாம்பார்.!!


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்