Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஓரமா போ பா.ஜ.க அடிச்சு ஏறிவரும் காங்கிரஸ் கூட்டணி ஜம்மு & காஷ்மீர் தேர்தல் முடிவுகள்..?



ஜம்மு & காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் ஜம்மு & காஷ்மீர் மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்து உள்ளனர் 

 ஜம்மு & காஷ்மீர்  90 தொகுதிகள் உள்ளது இதில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவையாகும்.இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தும், பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தனியாக தேர்தல் களத்தில் இறங்கின.

 ஜம்மு & காஷ்மீர் தேர்தல் முடிவில் இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளில் ,காங்கிரஸ் 6 தொகுதிகளில், சி.பி.எம். 1 தொகுதியும் என வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு & காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

அதேபோல் தனித்து தேர்தல் களம் கண்ட பா.ஜ.க. 29 தொகுதிகளில், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக ஆம் ஆத்மி கட்சி 1இடம் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் இதர கட்சி வேட்பாளர் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்