திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்
இயக்குநர் போஸ்_வெங்கட் அவர்களின் படைப்பில் நாளை ( அக்18) வெளியாகும் "சார்" திரைப்படம் வெகு மக்களின் நல்லாதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.
அக இருளைப் போக்கும் அறிவொளி அனைத்துத் தரப்பாருக்கும் கிட்ட வேண்டுமென போராடும் ஓர் ஆசிரியக் குடும்பம் சந்திக்கும் பெருந்துயரமே "சார்".
சாமியின் பெயரால் அப்பாவி உழைக்கும் மக்களை அடக்கியொடுக்கி ஆதிக்கம் செய்யும் சாதியவாதிகளின் கொட்டத்தை அடக்கும் ஆசிரியர் சிவஞானம் ( நாயகன் விமல்),
அவரது தந்தை ஆசிரியர் பொன்னரசன் (நடிகர் சரவணன்),
அவரது தாத்தா ஆசிரியர் அண்ணாதுரை (நடிகர் ஆட்டோ சந்திரன்) ஆகியோர், எளிய மக்களுக்காகப் படும்பாடு கொடுமையினும் கொடுமை!
1950களில் சாதியம் எப்படி இருந்தது என்பதைக் கண்முன்னே கொண்டுவருகிறார் இயக்குநர் போஸ் வெங்கட் அவரது சமூகப் பொறுப்புணர்வுக்கும் சமத்துவப் பெருநோக்கிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!
0 கருத்துகள்