Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

12 தீர்மானங்கள் தொல். திருமாவளவன் அவர்கள் மகளிர் மாநாட்டில் அறிவிப்பு..


 

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு "மகளிர் மாநாடு.

அக்டோபர் 2 உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மகளிர் மாநாட்டில் இந்த மாநாடு ஆளுங்கட்சிக்கு எதிராக நடைபெற்றது இருந்தும் ஆளும் கட்சியின் இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .தி.மு.க கூட்டணி கட்சிகளும் கலந்துக்கொண்டனர்.

மாநாட்டின் தொடக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் 12  தீர்மானங்களை அறிவித்தார் பின்வருமாறு.


1.அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டம்மியற்றவும் வேண்டும் 

2.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும் 

3.மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் 

4.மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் 

5.தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும் 

6.தமிழ்நாட்டில் போதைப் பொருளட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் 

7.மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்

8.குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்கள் உருவாக்க வேண்டும் 

9.மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும் 

10."டாஸ்மாக்" என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும் 

11.தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் 

12.மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். 

13.வைகுன்டர் பிறந்த நாளில் இனிவரும் காலங்களில் காந்தி ஜெயந்தியை போல் மது கடைகளை விடுமுறை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை" பிரஜாபதி அடிகளார் "மாநாட்டின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அந்த வேண்டுகோள் ஏற்று தொல்.திருமாவளவன் அவர்கள் 13 வது தீர்மானமாக அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்