மதுரையில் திருமாவளவன் உருவ
பொம்மை எரிப்பு அருந்ததியர் 3 % உள் இட ஒதுக்கீட்டை தடை செய்ய துடிக்கும் சங்கிகளின் மறு உருவம் என மதுரையில் திருமாவளவன் கொடும்பாவி எரிப்பு என துண்டறிக்கை கையில் வைத்துக்கொண்டு.
புரட்சி புலிகள் அமைப்பினர் கைது ...
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புரட்சி புலிகள் அமைப்பின் சார்பில் அருந்ததியர் சமுதாயத் 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது அதன் பின்பு அவர்கள் திடீரென்று திருமாவளவன் எம்பி உருவ பொம்மையை நடுரோட்டில் எரித்தனர்.
இதைத்தொடர்ந்து புரட்சி புலிகள் அமைப்பின் மாநில இளைஞரணி தலைவர் கருப்பையா தொண்டரணி செயலாளர் சக்திவேல் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாவட்ட செயலாளர் தாமரைக்கனி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில சிறிது நேரம் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
0 கருத்துகள்