விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறியது நேற்று அரசியலுக்கு வந்த நபர் துணை முதல்வர் ஆகலாம் 40 வருடம் சினிமாவில் நடித்திவிட்டு வந்தவுடன் முதலமைச்சராகலாம். ஆனால் 35 வருடம் அரசியலில் அடிமட்டத்தில் இருந்து உழைத்து வந்து ஒரு இயக்கத்தை கட்டியமைத்து இன்றைக்கு தமிழ்நாட்டில் மாபெரும் ஒரு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் நகர்த்தி விட்டு எந்த ஒரு அரசியல் கட்சியும் நகரம் முடியாது என்ற நிலையிலும் கூட அவர் துணை முதலமைச்சராக்க கூடாத நிலை இருக்கிறது.
பின்பு தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி வெட்டி பெருமை பேசுகிறார்கள் ph.d முடித்துள்ளார் அவர் பேப்பர் இல்லாமல் இரண்டு மணி நேரம் பேசுவார் 35 வருட கால அரசியல் முதிர்ச்சி பெற்றவர் என கூறும் நபர்கள் ஏன் தொல் திருமாவளவன் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று கூறுவதில்லை .
இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உன்மையான தொண்டர்களின் ஆசையே தலைவர்.திருமாவளவன் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதுதான்.
தி.மு.க வை பற்றி கூறுகையில் 2004 பாராளுமன்ற லோக் சபா தேர்தலில் 15 சீட்டு ஜெயித்த தி.மு.க 8 மினிஸ்டர் பதவிகளை வாங்கியது. ஒட்டுமொத்த கூட்டணி சீட்டுகளின் எண்ணிக்கையில் 6% மட்டுமே அவர்கள் பெற்ற வெற்றி. அதே போன்ற அதிகாரப்பகிர்வை மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டால் என்ன தவறு..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் . ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எங்களுடைய நிலைப்பாடு என கூறியுள்ளார்.
0 கருத்துகள்