Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அமெரிக்காவிலிருந்து மாரி செல்வராஜை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்...

ஆகஸ்ட் 23 இல் வெளியான வாழை திரைப்படம் எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் உண்மையான சம்பவத்தை மாரி செல்வராஜ் படமாக இயக்கி இருந்தார் இந்த நிலையில் அவருக்கு திரைத் துறையில் முன்னணி இயக்குனர்கள் முதல் இன்று உள்ள இயக்குனர் வரை நடிகர்கள் என அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டினார் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று நேரடியாக வாழ்த்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க சென்றிருக்கும் நிலையில் அவர் அமெரிக்காவிலிருந்து வாழை படம் பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில்  மாரி செல்வராஜ்க்கு வாழ்த்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ்க்கு அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்