Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்த திருமா ஒரு வார்த்தையில் முடித்த உதயநிதி ஸ்டாலின்


வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் நிலையில்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த பேட்டியில் மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள எந்த கட்சியாக இருந்தாலும் வரலாம் மக்கள் பிரச்சினை பேசக்கூடிய எந்த சனநாயக சக்திகளும் ஓரே மேடையில் நிற்கலாம்.

 மக்களுக்கு பிரச்சனைக்கான தீர்வை அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் இந்த மாநாட்டில் சனநாயக சக்திகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் குறிப்பாக தொல்.திருமாவளவன் அ.தி.மு.க கட்சிக்கு  வெளிப்படையாக கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும் சாதி,மதவாத கட்சிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேர மாட்டோம்  மது போதையை விட சாதி போதை மிகவும் கொடூரமானது என அவர் கூறியுள்ளார் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய  கேள்வி அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்வதற்கு இது ஒரு ஆரம்பமா என்று கேட்டதற்கு தேர்தல் கூட்டணி வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக கூட்டணி சேர்வது என்பது வேறு.

சிவகங்கைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்ததிருந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார் அ.தி.மு.க.வை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அது அவர்களின் விருப்பம் என ஒரு வார்த்தைகள் முடித்துக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்