Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மௌனம் கலைத்த மோகன்லால் இதைப்பற்றி எனக்கு தெரியாது ரஜினி..


ஹேமா கமிட்டி வெளிவந்த நிலையில் கேரள மாநில திரையுலகம் முழுவதும் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறிய நிலையில் திரை பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் என்ன.

இதனையடுத்து இந்தியா முழுவதிலும் அதாவது குறிப்பா தென்ந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் பாலியல் குற்றங்களை பற்றி அதிகமாக விமர்சித்து வருகிறார்கள் அனைத்து மாநிலங்களிலும் திரைத்துறையில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்தேறி கொண்டிருக்கிறது ஒரு சில நடிகர்கள் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்  குறிப்பாக நடிகர் ராதிகாசரத்குமார் ஒரு பேட்டியில்   பாலியல் துன்புறுத்தல் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது என்றும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை படம்பிடித்து வந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

நடிகர் சங்கம்(அம்மா )தலைவர் பதவியியை ராஜினாமா செய்த பின்னர் இவ்வளவு நாள் மௌனம் காத்த மோகன்லால் கூறியிருப்பது என்னவென்றால் நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை இங்கேயே தன் இருக்கிறேன் என்று மோகன்லால் காட்டமாக கூறியுள்ளார் மலையாளத் திரையுலகம் பாலிவுட்டை போன்று பிரமாண்டமானது அல்ல மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது ஹேமா கமிட்டி அளித்துள்ள பாலியல் அத்துமீறல்கள் சம்பவங்கள் நடந்திருக்கலாம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் தான் இது போன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் உள்ளது தற்பொழுது எழுந்துள்ள பிரச்சனைகள் இருந்து மலையாள திரையுலகம் காக்க வேண்டும் இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி பத்தி கேட்டதற்கு இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

பின்பு விஷாலிடம் இதைப் பற்றி கேட்டதற்கு பெண்களிடம் யாராவது அட்ஜஸ்மென்ட் கேட்டால் அவர்களை பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று காட்டமாக பதில் கூறினார் பின்பு செய்தியாளர்களில் ஒருவர் உங்கள் மீது ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்  என்று கேட்டதற்கு விஷால் எனக்கு அந்தப் பெண் யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்