தமிழ்நாட்டில் சாதியை வன்கொடுமைகள் அதிகமாக வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் தான் நிலவுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விபரங்களை பெற்றுள்ள மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 394 கிராமங்களில் தென்மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளது
இதில் 45 கிராமங்களுடன் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது 29 கிராமங்களுடன் திருநெல்வேலி, 24 கிராமங்களுடன் திருச்சி மூன்றாம் இடம், 22 கிராமங்களுடன் தஞ்சாவூருக்கு நான்காவது இடம், 20 கிராமங்களுடன் தேனி ஐந்தாம் இடத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இந்த பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினாலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்கள் நடத்தினாலும் ஜாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
சமீபத்தில் வெளியான "நந்தன் படம் " இயக்குனர் சரவணன் ஒரு பேட்டியில் உண்மை நிகழ்வை கூறியுள்ளார் சுதந்திர தினத்துக்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கையில் இருந்த தேசிய கொடியை கயிரை பருங்கி அதை ஏற்ற விடாமல் சாதியவாதிகள் தடுத்து அந்த கொடியை அவர்கள் ஏற்றியுள்ளனர்.பின்பு இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார் அதற்கு ஆட்சியர் அவர்கள் யார் என்று சொல்லுங்கள் நான் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகையில் அதற்கு அவர் நான் மீண்டும் அதே ஊரில் தான் வாழ வேண்டும் சன்டை வேண்டாம் எனவே அதிகாரிகள் நீங்களே ஆணையிடுவது போல் கூறுங்கள் நான் உங்களை பார்த்து இவ்வாறு கூறியதாக வெளியில் தெரிய வேண்டாம்.
ஊராட்சி மன்ற தலைவராக எனது கடமையை நான் செய்ய விரும்புகிறேன் அடுத்த முறையாவது நான் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில் அவர் அதிகாரியிடம் உத்தரவிடுகிறார் நான் இங்கு இல்லை என்றாலூம் அடுத்த சுதந்திர தினத்துக்கு இவர் தான் கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவிடுகிறார்.அதைபோல் சுதந்திர தினம் வருகிறது அதிகாரி கூறுகிறார் ஊராட்சிமன்ற தலைவர் தான் கொடி ஏற்ற வேண்டும் என்று பின்பு ஊர் மக்கள் குழந்தைகள் கூடுகிறார்கள் ஊராட்சி மன்ற தலைவர் கொடி ஏற்றி கயிரை கட்டி முடித்து கையில் சாக்லேட் தட்டை எடுத்து திரும்பி பார்க்கும் போது ஊர் மக்கள் ஒருவர் நபரும் இல்லை குழந்தைகள் மட்டும் இருந்தார்கள் அவர்களிடம் சாக்லேட் கொடுத்ததற்கு குழந்தைகள் வேண்டாம் எனக் கூறி சென்றுவிட்டார்கள் .
ஊராட்சி மன்ற தலைவர் அப்போது நினைத்த ஒன்றுதான் கொடியேற்ற விடாமல் தடுத்தது இவ்வளவு வலியை ஏற்படுத்த விடவில்லை ஆனால் குழந்தைகள் சாக்லேட்டை வாங்காமல் போனது அதை விட வலியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் எங்கேயாவது உண்டா என்னை கொடியேற்ற விடவில்லை என்று நான் புகார் செய்ய முடியும் ஆனால் என்னிடம் இனிப்பு வாங்கவில்லை என்று என்னால் போய் யாரிடமும் புகார் கொடுக்க முடியும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2000 வருட சாதியைப் பித்து இன்று வரையும் தென் மாவட்டங்களில் குறையவில்லை.
0 கருத்துகள்