பா.ரஞ்சித் இயக்கிய விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் கே.ஜி.எஃப் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி விமர்சிக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
0 கருத்துகள்